top of page

பெரியப்பட்டிணம்
முத்து பவளக்கிராமத்தின் பண்டையத் துறைமுகம்

பெரியப்பட்டினம்:
பெரியப்பட்டினம் துறைமுகத்தைப் பற்றி மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகளில் (Inscription) சொல்லப்படுகிறது. மார்க்கோபோலோ இங்கு நடைபெற்ற முத்துக்குளித்தலைக் குறிப்பிடுகிறார். மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி இபுன்பதூதா இங்கு வருகை தந்து தங்கி இருந்தபோது பெரியப்பட்டினத்தை பத்தன் என்றே குறிப்பிடுகிறார். பெரியப்பட்தினம் துறைமுகம் பராக்கிரமப்பட்டினம் என்றும் திருநெல்வேலி பக்கம் மாறமங்களம் என்னும் ஊரில் பெரியப்பட்டினத்திற்கு 58 வியாபாரிகள் சென்றதாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டுக்களில் முத்து வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளின் பெயர்களையும் குறிப்பிடுகின்றன. மேலும் கி.பி.1262 இல் AD தீர்த்தாண்ட தானத்தில் ஊரில் கிடைத்த குறிப்புகளில் அஞ்சுவண்ணம், மணிகிராமத்தார் மற்றும் வளஞ்சியார் என்றும், தென் இலங்கையை சேர்ந்த முத்து வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவர்களையும் குறிப்பிடுகின்றன. பெரியப்பட்டினத்தில் உள்ள சமாதியில் யூதர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறது. பெரியப்பட்டினம் என்ற பெயர் எப்போது முதலில் உபயோகப்பட்டது என்று தெரியாமல் இருந்தாலும் பெரியப்பட்டினம் என்ற பெயர் இது ஒரு துறைமுகப்பட்டினமாக திகழ்ந்தது என்று அறியப்படுகிறது. லண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகம் மற்றும் ஆவணங்களையும் மற்றும் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னார் குடாவை (Gulf of Mannar)கொண்ட டச்சு (Dutch) வரைபடத்தைப்பார்வை இட்ட போது பெரியப்பட்டன் என்ற பெயர் இப்போது இருக்கும் பெரியப்பட்டினத்தில் தான் உள்ளது என்று அறிகிறோம், ஹென்றி கோர்டியில்(Hendri Cordier) மேல் நாட்டு அறிஞர் பெரியப்பட்டினம் பரவர்களின் முக்கிய நகரமாக விளங்கியது என்று Jesuit mission வியாபார நிமித்தம் வந்தபோது குறிப்பிடுகின்றனர். இந்த உலகப் பிரசித்த பெற்ற துறைமுகம் 13 ஆம் மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் செழித்தோங்கியது என்று தெரிகிறது.14 ஆம் நூற்றாண்டில் டாபடான்(Ta-pa-tan) in Daoy Zhilu சீன நூலில் குறிப்பிட்டபடி பெரியப்பட்டினமாகும்.

சீன மற்றும் அரேபியர்களின் வணிகம்:
தமிழககடற்கரையில் சீன மற்றும் அரேபிய வணிகர்கள் வந்த போது இங்குள்ள இடங்கள் இரட்டைப்பெயருடையவனாக ஊர் மற்றும் பட்டினம் என்று அழைக்கப்பட்டன. கடற்கரை ஊர்களில் கடல் வாணிபம் அதிகரித்தபோது சில ஊர்கள் பட்டினம் என்று இரண்டாவது பெயருடன் வழங்கியது. சில துறை முகங்கள் அந்த கால அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட போது அந்த அரசர்கள் பெயருடன் விளங்கியது. முக்கிய கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய இடங்கள் மட்டும் பட்டினம் என்று அழைக்கப்பட்டன. சீனர்களின் பாரம்பரிய வணிகம் பீங்கான் இங்கு நெறய கண்டு எடுக்க பட்டது என்று வரலாற்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. பச்சை பீங்கான் துண்டுகள் லோங்குவான்(Longguvan) ஆன (Klim) 13 ஆம் மற்றும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் மற்றும் நீலம் மற்றும் வெள்ளை நிற பீங்கான் துண்டுகள் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜிங்கடெஸ்கண் (Jingdezehn) னை சேர்ந்தது என்றும் கண்டறிந்தனர்.பெரியப்பட்டிணத்தில் கண்ட இந்த குறிப்பிடத்தக்க அறிய வகை பீங்கான் துண்டுகள் கண்டு முனைவர்.சுப்ராயலுடன் பெரியப்பட்டினத்தில் அகல் ஆய்வு செய்ய 1987 இல் ஜனவரியில் எண்ணினார். பல இடங்களில் அகழ்வு குழிகள் தோண்டப்பட்டன . இவர்களுடன் Mitsubizhi அறக்கட்டளையின் பேராசிரியர் Y.Aaryarg பிசாஃபியா பல்கலைக்கழகம் பேராசிரியர் E.Nita of Kagoshima பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர் Y.Kanayawa Idemiten அருட்காட்சியத்தின் சைனா பீங்கான்களின் சரித்திர வல்லுநர் ஆகியவர்களுடன் இவர்கள் பெரியப்பட்டினத்தில் ஏப்ரல் 1987 இல் குழிகளில் சோதனை செய்ததில் உடைந்த பீங்கான்களை கண்டனர்.

இந்தக்கிராமத்தில் வடமேற்கு பக்கத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு அதில் மேல் பகுதிகளில் சீன உடைந்த பீங்கான்கள் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யுவான் நீலம்(Yuvan Blue) மற்றும் வெள்ளை பீங்கான்கள் கீழ்மட்டத்தில் கிடைத்ததில் இளம் பச்சை 14 ஆம் குறுகிய காலத்தில் கிடைத்தன. இந்த கிராமத்திலிருந்து ஒன்றை கிலோ மீட்டர் கடலிலிருந்து மேற்குப்பகுதிகளில் கடலுக்கு இடையே கப்பலாறு ஊரணி என்றும் பெரிய நீர் நிலை உள்ளது. இந்தப்பெயர் கப்பலாறு நீர்வழிப்பாதையாக கடலுடன் இணைந்து கப்பல்கள் இந்த நீர்நிலையில் சென்று வந்தது என்றும் அறியப்படுகிறது. தமிழ்ப்பல்கலைக்கழகம் இந்த நீர் நிலையில் பக்கத்தில் 6 பழைய நகரம் இருந்த பக்கத்திலும் ஆராயப்பட்டன. இங்கும் சிதைந்த பீங்கான் துண்டுகள் கிடைத்தாலும் , இந்த கிராமத்தில் எல்லா இடங்களிலும் மற்றும் இக்கிராமத்தின் பக்கத்தில் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள களிமங்குண்டு என்னும் இடத்திலும் கிடைத்தன. மற்றும் இஸ்லாமிய பீங்கான்களும் கிடைத்தன. அனால் அவை சீன பீங்கான்களை விட சிறியதாகும். அவை 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை உள்ளதாகும். இந்த பீங்கான் துண்டுகளுடன் பெரியப்பட்டினம் சோழ,பாண்டிய மற்றும் மதுரை சுல்த்தான்களின் பழைய நாணயங்களுக்கு கிடைத்தன . ஒரு சீன நாணயம் ஒன்று கிடைத்தது. இங்கு அதிகமாக சீன மற்றும் இஸ்லாமிய பீங்கான்கள் கிடைத்ததனால் இக் கிராமம் ஒரு காலத்தில் கிழக்கு மேற்கை இணைக்கும் உலகப்புகழ் பெற்ற வியாபார நகரமாகத் திகழ்ந்தது என்று அறியப்படுகிறது. அரபியர்கள் அங்கு இருந்து குதிரைகளை இங்கு உள்ள மன்னர்களுக்கு கொண்டு வந்து இறக்குமதி செய்தார்கள் அப்படி குதிரை வணிகத்திற்கு இங்குள்ள துறைமுகம் பெரிதும் உதவியதை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டி காட்டியுள்ளார்கள்.. மேற்கத்திய அரபு நாடுகளுக்கு இந்த துறைமுகத்திலிருந்து மசாலா மற்றும் கரும்பு ஏற்றுமதி ஆகின. அரேபியர்களின் வணிகம் பெரியப்பட்டினத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.
பவித்திர மாணிக்கப்பட்டினம்:

பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் கீழக்கரை வேதாளை ஆகிய இரு ஊர்களுக்கு இடையே கடற்கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. அதன் இன்றைய பெயர் பெரியப்பட்டிணம் ஆகும்.கி.பி.15 ஆம் நூற்றாண்டு வரை மிகச் சிறந்த பாண்டிய நாடு துறை முகங்களில் ஒன்றாக விளங்கி வந்தது. இராமநாதபுரம் பகுதியில் அமைந்திருந்த இந்த பவித்திர மாணிக்கப்பட்டினத்தைப் பற்றி கல் வெட்டு ஒன்று திருப்புல்லாணி திருக்கோயிலில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டினை பொறித்தவன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆவான். கி.பி.1216-1232 அந்த கல்வெட்டின் வாசகம் கீழச் செம்பி நட்டு பவித்திர மாணிக்கப்பட்டினம் என்று குறிப்பிடுகிறது. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் அவர்கள் அப்பொழுது பராக்கிரம பட்டணம் என அழைக்க பெற்ற பவித்திரமாணிக்கபட்டினத்தை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்த விக்கிரபாண்டியனுக்கு தூதுக்குழு ஒன்றினை அனுப்பி வைத்தார்கள். கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்க்காக அந்த பாண்டிய மன்னனது அனுமதியைக் கோரி அந்தக் குழு அங்கு அனுப்பப்பட்டது. பௌத்தர மாணிக்கப்பட்டினத்தில் கோட்டை, அரண்மனை கருவூலம் ஆகியவை சுல்த்தான் செய்யது இப்ராஹிம் உடமை ஆகியன. இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி நடை பெற்றது ஹிஜ்ரி 583 துல்கய்தா பிறை 10 (11.01.1188) ஆகும்.
பெரியப்பட்டினம்-வரலாற்று தடயங்கள்:
1. கோட்டை மதில் சுவர்:
இலங்கை வரலாறு குறிப்பிடும் பெரியப்பட்டினத்தின் கோட்டை மதில்கள் இடிபாடுகள் அண்மைக்காலம் வரை காணக்கூடியதாக இருந்தது. மதில் சுவரின் கனம் சுமார் மூன்று அடி இருக்கும் இந்த ஊரின் தென்மேற்குப்பகுதியில் ஆனி, ஆடி,மாதங்களில் வீசும் காற்றினால் மணல் மூடப்பட்டும் சீமைக்கருவேல் போன்ற காட்டுச் செடிகள் சூழ்ந்தும் இந்த இடிபாடுகள் மறைந்து விட்டன. இந்தப்பகுதியில் முதன் முறையாக அரசினால் கி.பி.1952-60 இல் நில அளவை மேற்கொண்டு இந்த நிலத்திற்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டதால் இப்பொழுது அந்த பகுதி நிலம் சமப்படுத்தப்பட்டு தோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு வேலி அடைப்புகளை ஏற்பட்டு விட்டன. ஆகவே முந்தய பராக்கிரம பட்டினத்தைச் சூழ்ந்து இருந்த அந்தக் கோட்டைச் சுவரின் எஞ்சிய இடிபாடுகளை இன்று கண்டு கொள்வது இயலாத காரியமாகி விட்டது.

2. சுல்த்தான் பள்ளி:

bottom of page